/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீதிகளை அலங்கரித்த வித்தியாச விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
/
வீதிகளை அலங்கரித்த வித்தியாச விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
வீதிகளை அலங்கரித்த வித்தியாச விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
வீதிகளை அலங்கரித்த வித்தியாச விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED : செப் 08, 2024 12:20 AM
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள பல விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார, வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை முதல், ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.
சென்னை நகரில் 1,519 சிலைகள் வைக்க, போலீசார் அனுமதி வழங்கினர். இச்சிலைகள், நகரின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் வித்தியாசமாக நிறுவி, பல அமைப்புகள், குடியிருப்புவாசிகள் வழிபாடு செய்தனர்.
அந்த வகையில் அருகம்புல் விநாயகர், ஐந்து முக விநாயகர், முக்கண் விநாயகர் உள்ளிட்ட விநாயகர், பலரும் கண்டு ரசித்தனர்.
ஒரு வார வழிபாட்டிற்கு பின், ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அரசு அனுமதித்த நீர்நிலைகள், கடலில் கரைக்கப்பட உள்ளது.
கடலில் கரைக்க நாட்கள் ஒதுக்கீடு, சிலைகள் வரும் வழிகள், அதற்காக ஏற்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றம் போன்ற நடவடிக்கை குறித்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கவனம் ஈர்த்தவை
ஆவடி மூர்த்தி நகரில், திருவள்ளுவர் தமிழ் சங்க பேரவை சார்பில், 1 ரூபாய்க்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பொதுமக்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.
சில்லரை வணிகத்தை ஊக்குவிக்க, 1 ரூபாய் சிலை விற்கப்பட்டதாக, அச்சங்கத்தினர் தெரிவித்தனர். சந்தை, கடைகளில் குறைந்தபட்சமாக 35 - 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மயில் தோகை விநாயகர்
மணலி புதுநகரில், ஹிந்து முன்னணி சார்பில், பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 15 கிலோ மயில் தோகைகள் அடங்கிய 18 அடி உயர சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
தேங்காய் விநாயகர்
மணலி, பெரியதோப்பு பகுதியில் 2,500 தேங்காய்களால் 15 அடி உயரத்திற்கு பிரமாண்ட விநாயகர் சிலை, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஆரஞ்சு, அன்னாசி பழம், பித்தளை கலச சொம்பு, கரும்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. இதற்கான செலவு 2.5 லட்சம் ரூபாய்.
மைசூர்பா விநாயகர்
செம்பியம், கென்னடி சதுக்கத்தில், 5,000 பிஸ்கட்களை கொண்டு, 'பிஸ்கட்' விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பத்துார் வெங்கடாபுரத்தில் 500 கிலோ மைசூர்பாக்கில் செய்யப்பட்ட விநாயகரை, பலரும் ரசித்தனர்.
- -நமது நிருபர்- -