/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காகத்திற்கு உணவிட்ட பெண் பற்களை உடைத்த திருநங்கை
/
காகத்திற்கு உணவிட்ட பெண் பற்களை உடைத்த திருநங்கை
ADDED : ஆக 06, 2024 12:35 AM
எம்.ஜி.ஆர்., நகர்,
எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளம் வெங்கட்ராமன் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பூமாதேவி, 53.
கீழ் தளத்தில் வசிக்கும் இவர், நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு, காகத்திற்கு உணவு வைத்துள்ளார்.
அந்த உணவு படிக்கட்டில் விழுந்த நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை மேகலா, 30, என்பவர் படியில் ஏறும் போது, அதைப் பார்த்து ஆபாசமாக பேசியுள்ளார்.
இதில், பூமாதேவி மற்றும் மேகலா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மேகலா கீழே கிடந்த கட்டையால் பூமாதேவியை தாக்கியதில், அவரது மூன்று பற்கள் உடைந்து விழுந்தன.
காயமடைந்த அவர், கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.