/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிர்ணி பழம் விளைச்சல் அமோகம் கிலோ ரூ.15க்கு விற்பனை
/
கிர்ணி பழம் விளைச்சல் அமோகம் கிலோ ரூ.15க்கு விற்பனை
கிர்ணி பழம் விளைச்சல் அமோகம் கிலோ ரூ.15க்கு விற்பனை
கிர்ணி பழம் விளைச்சல் அமோகம் கிலோ ரூ.15க்கு விற்பனை
ADDED : ஏப் 08, 2024 02:27 AM
சென்னை:கிர்ணி பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீர்ச்சத்துள்ள பழங்களில் ஒன்றாக கிர்ணி பழம் உள்ளது. இவற்றில் நான்கு ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் கிர்ணி பழங்களின் விளைச்சல் களைகட்டியுள்ளது.
நெல் அறுவடைக்கு பின், மாற்று பயிராக இவற்றை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, கிர்ணி பழங்கள் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பபட்டு வருகிறது.
வரத்து அதிகரிப்பால், கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாலையோர கடைகள் மற்றும் வாகனங்களில், 6 முதல் 7 பழங்கள் வரை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூஸ் கடைகளிலும், கிர்ணி பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜூஸ், 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மலிவான விலையில் கிடைப்பதால், கிர்ணி பழங்களை, பலரும் அதிகளவில் வாங்கி சுவைக்க துவங்கியுள்ளனர்.

