ADDED : ஜூன் 24, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெசன்ட் நகர்:பெசன்ட் நகர், ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அற்புதம், 54. அன்னை வேளாங்கண்ணி சர்ச் வளாகத்தில், பொதுக்கழிப்பறையை குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். உறவினர் ஒருவரின் மகளை, அற்புதம் வளர்க்கிறார்.
அற்புதத்தின் அண்ணன் கபாலி மகன் கிஷோர், 25, வளர்ப்பு பெண்ணை காதலித்துள்ளார். இதனால், தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
இதற்கு அற்புதம் தான் காரணம் என நினைத்த கிஷோர், நேற்று, பொது கழிப்பறையில் பணியில் இருந்த அற்புதத்தை, முகம், கால் பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டினார். அவர் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவான்மியூர் போலீசார், கிஷோரை கைது செய்தனர்.