/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டி மீது மோதிய பைக் ஓட்டிச்சென்ற வாலிபர் பலி
/
மூதாட்டி மீது மோதிய பைக் ஓட்டிச்சென்ற வாலிபர் பலி
ADDED : ஆக 17, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்., சாலையைச் சேர்ந்தவர் கவுதம், 26. இவர், வடபழனியில் உள்ள பிரபல மாலில், சிறுவர்களுக்கான விளையாட்டு பிரிவில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 'பைக்'கில், நெற்குன்றம் அருகே சென்ற போது, திடீரென மூதாட்டி ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.இதனால், மூதாட்டி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கவுதம், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி கலாரத்தினம், 66, சிறு காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.