/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்கா மரங்கள் வெட்டி சாய்ப்பு விதிமீறலில் ஈடுபட்ட வாலிபர்கள்
/
பூங்கா மரங்கள் வெட்டி சாய்ப்பு விதிமீறலில் ஈடுபட்ட வாலிபர்கள்
பூங்கா மரங்கள் வெட்டி சாய்ப்பு விதிமீறலில் ஈடுபட்ட வாலிபர்கள்
பூங்கா மரங்கள் வெட்டி சாய்ப்பு விதிமீறலில் ஈடுபட்ட வாலிபர்கள்
ADDED : மே 20, 2024 01:06 AM
விருகம்பாக்கம்:கிரிக்கெட் விளையாட மாநகராட்சி பூங்காவில் தடையாக இருந்த மரங்களை, இளைஞர்கள் வெட்டி சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டு விருகம்பாக்கத்தில், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளது. இங்கு, மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் அமைந்துள்ளது.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். விளையாட்டு திடலில் உள்ள மைதானத்தில் உள்ள மரங்கள் கிரிக்கெட் விளையாட தடையாக இருந்துள்ளன.
இதையடுத்து, பூங்காவில் உள்ள 4 -- 5 மரங்களை இளைஞர்கள் வெட்டியதாக தெரிகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மரங்களை வெட்டாமல் இருக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கையும் எழுந்துள்ளது.