ADDED : ஜூலை 16, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழும்பூர், எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள 'சீசன்ஸ் காம்ப்ளக்ஸ்' 4வது தளத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், மனிதவள மேலாளராக பணிபுரிந்து வருபவர் இக்பால், 37.
நேற்று காலை 10:00 மணிக்கு வந்தபோது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, 15,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இக்பால் புகார் அளித்து உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

