ADDED : மே 20, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்:கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் ராம் நாராயண அகர்வால், 44; கொடுங்கையூர், குப்பை கிடங்கு எதிரில் காயலான் கடை நடத்தி வருகிறார்.
கடந்த மே, 8ம் தேதி, அவரது சொந்த ஊரான உ.பி., மாநிலத்தில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு, குடும்பத்தினருடன் சென்று, நேற்று வீடு திரும்பினார்.
அப்போது, பூஜை அறையில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

