/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்., மிஷினில் நுாதன முறையில் ரூ.6 லட்சம் திருட்டு?
/
ஏ.டி.எம்., மிஷினில் நுாதன முறையில் ரூ.6 லட்சம் திருட்டு?
ஏ.டி.எம்., மிஷினில் நுாதன முறையில் ரூ.6 லட்சம் திருட்டு?
ஏ.டி.எம்., மிஷினில் நுாதன முறையில் ரூ.6 லட்சம் திருட்டு?
ADDED : ஏப் 18, 2024 12:18 AM
மீனம்பாக்கம், மீனம்பாக்கத்தில், வங்கி ஏ.டி.எம்.,மில் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து எடுத்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மீனம்பாக்கத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது.
அதில், கடந்த, 4 மற்றும் 6ம் தேதிகளில், மர்ம நபர்கள் இருவர் நுழைந்து மிஷினின் செட்டிங்கை மாற்றி மாற்றி நுாறு ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, 500 ரூபாய் நோட்டுகளை மோசடி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த வகையில், 6 லட்சம் ரூபாய் வங்கியின் ஏ.டி.எம்., மிஷினில் இருந்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்லாவரம் கிளை மேலாளர் ராஜதுரை என்பவர், காவல் நிலையத்தில் புகார் செய்தார். மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.