ADDED : மார் 08, 2025 12:38 AM
திருமங்கலம், அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ்., அகாடமியில் மதுரையைச் சேர்ந்த சஞ்சீவி, 23, வேலுாரைச் சேர்ந்த தருண் பாபு, 21, திருச்சியைச் சேர்ந்த துரைராஜா, 23, ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள், தினமும் இரவு படித்துவிட்டு காலையில் துவங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு முழுதும் பிடித்துவிட்டு, காலை 4:00 மணியளவில் கதவை திறந்து வைத்தபடி துாங்கி உள்ளனர்.
அப்போது, மாணவர்களின் இரண்டு மொபைல் போன்கள், சான்றிதழ்கள் இருந்த பையுடன் லேப் - டாப்கள் திருட்டு போயின.
வீட்டிற்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் அறைக்குள் நுழைந்து, மொபைல் போன், லேப் - டாப்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.