/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மூன்றாவது கண்' கண்காணிப்பில் வருகிறது 125 ரயில் நிலையங்கள்
/
'மூன்றாவது கண்' கண்காணிப்பில் வருகிறது 125 ரயில் நிலையங்கள்
'மூன்றாவது கண்' கண்காணிப்பில் வருகிறது 125 ரயில் நிலையங்கள்
'மூன்றாவது கண்' கண்காணிப்பில் வருகிறது 125 ரயில் நிலையங்கள்
ADDED : மே 14, 2024 12:51 AM

சென்னை, தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட அனைத்து ரயில் கோட்டங்களிலும் பிரதான ரயில் நிலையங்களை தவிர, மற்ற ரயில் நிலையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் இல்லை என பயணியர் தெரிவித்து வருகின்றனர்.
மற்றொருபுறம் ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பதிலும் நடைமுறை சிக்கல் இருப்பதாக, ரயில்வே போலீசார் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், ரயில் நிலையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணியை, தெற்கு ரயில்வே கடந்த சில மாதங்களாக வேகப்படுத்தி உள்ளது.
அதன்படி, சென்னை ரயில் கோட்டத்தில் 125 ரயில் நிலையங்களில், 400க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன. இந்த கேமராக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ரயில் கோட்டத்தில் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணுார், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை.
கும்மிடிப்பூண்டி, மூர்மார்க்கெட் வளாகம், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லிவாக்கம், பட்டரவாக்கம், அம்பத்துார், திருமுல்லைவாயில், ஆவடி, இந்து கல்லுாரி, பட்டாபிராம், புட்லுார், திருவள்ளூர், வேப்பம்பட்டு, ஏகாட்டூர்.
செஞ்சி பனம்பாக்கம், ஆம்பூர், திருவாலங்காடு, மணவூர், கடம்பத்துார் உட்பட 125 ரயில் நிலையங்களில் 400க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் 38 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களுக்கு ஏற்றார்போல், ஐந்து முதல் அதிகபட்சமாக 20 கேமராக்கள் வரை அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த சில நாட்களில் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
இதுதவிர, எஞ்சியுள்ள 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கேமராக்கள் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

