/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருக்கச்சி நம்பிகள் அவதார விழா நிறைவு
/
திருக்கச்சி நம்பிகள் அவதார விழா நிறைவு
ADDED : மார் 09, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லியில் வைணவ மகான் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, திருக்கச்சி நம்பிகளின் அவதார உற்சவம் விழா, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது.
விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் காலை, மூலவர் திருமஞ்சனம், திருக்கைத்தல சேவை, திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பெரிய மங்களகிரி வாகனத்தில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளினார். இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இன்று முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள், தெப்ப உற்சவம் விழா நடைபெற உள்ளது.