/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம்
/
மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம்
மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம்
மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம்
ADDED : ஆக 08, 2024 12:43 AM

சென்னை,ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்கம் மற்றும் திண்டுக்கல் ரோல்பால் சங்கம் இணைந்து, யு - 11 மாநில அளவில், மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியை, திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தின.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட சிறுவர்களில் 21 மாவட்ட அணிகள், சிறுமியரில் எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகள் முடிவில், சிறுவர்களில் திருவள்ளூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.
செங்கல்பட்டு மாவட்ட இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்துக் கொண்டன. அதேபோல், சிறுமியரில் கோவை முதலிடத்தையும், திண்டுக்கல் இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின. செங்கல்பட்டு மற்றும் திருச்சி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்கம் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ரோல்பால் சங்கங்களின் நிர்வாகிகள், அணிகளை பாராட்டினர்.