/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.18 லட்சம் நிலமோசடி திருவாரூர் நபர் சிக்கினார்
/
ரூ.18 லட்சம் நிலமோசடி திருவாரூர் நபர் சிக்கினார்
ADDED : ஆக 23, 2024 12:25 AM

ஆவடி, சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெர்சிலின் ராஜா, 47, என்பவர், கடந்த மார்ச் 18ம் தேதி, ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மோரை கிராமத்தில் என் பெயரில் 1,800 சதுரடி நிலம் இருந்தது. கடந்த 2022ல், கொளத்துாரைச் சேர்ந்த 'இலக்கியா பில்டர்ஸ்' மேற்பார்வையாளர் வினோத்குமார் என்பவரிடம், மேற்கூறிய நிலத்தை அடமானம் வைத்து, 7 லட்சம் ரூபாய் கேட்டேன்.
ஆனால், வினோத் குமார், வேப்பம்பட்டில் உள்ள ஏ.வி.எஸ். என்டர்பிரைசஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆல்வான் மற்றும் ரங்கசாமி பெயரில் நிலத்தை பவர் எழுதி கொடுத்தால், 7 லட்சம் தருவதாக கூறினார்.
அதன்படி, நான் பவர் பத்திரம் எழுதி எழுதி கொடுத்தேன்.
இதில், உதயகுமார் மற்றும் வினோத் குமார் ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டனர்.
ஆனால், ஒரு லட்சம் மட்டும் கொடுத்து மீதி பணத்தை தராமல் வினோத் குமார் ஏமாற்றினார். சந்தேகத்தின் படி நிலத்தின் மீது வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, ஆவடி, அண்ணா நகர், காந்தி தெருவில் உள்ள ஜெயபிரகாஷ் என்பவருக்கு நிலம் விற்கப்பட்டு இருந்தது.
நிலத்தின் மதிப்பு 18 லட்சம்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த திலீப், 36, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.