/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க.,வுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் திருவொற்றியூர்
/
அ.தி.மு.க.,வுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் திருவொற்றியூர்
அ.தி.மு.க.,வுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் திருவொற்றியூர்
அ.தி.மு.க.,வுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் திருவொற்றியூர்
ADDED : மார் 30, 2024 12:26 AM
திருவொற்றியூர், அ.தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல், மார்ச் 23ல் வெளியிடப்பட்டது. இதில், வடசென்னை தொகுதிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என, அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க., நகர், ராயபுரம், கொளத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது வடசென்னை. தொகுதியில், 14.84 லட்சம் ஓட்டுகள் உள்ளன.
திரு.வி.க., நகர், ராயபுரம் சட்டசபை தொகுதிகளை கண்காணிக்க ஏதுவாக, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சரான ஜெயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெரம்பூர், ஆர்.கே., நகர் சட்டசபை தொகுதிகளை கவனிக்க, மாவட்ட செயலர் ராஜேஷ்; கொளத்துார் தொகுதியை கவனிக்க மாவட்ட செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான வெங்கடேஷ் பாபு, இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
திருவொற்றியூர் சட்டசபை தொகுதியை கவனிக்க தனியாக யாரையும் நியமிக்கவில்லை. சம்பந்தப்பட்ட தொகுதி மாவட்ட செயலர்மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக, 2.74 லட்சம் ஓட்டுகள் உடைய திருவொற்றியூர் சட்டசபை தொகுதியை கவனிக்க, வாக்காளர்களுக்கு பரிட்சயமான யாரும், இக்குழுவில் இடம் பெறவில்லை.
மாவட்ட செயலருக்கு அடுத்தபடியாக, கட்சியில் சீனியர், ஏற்கனவே பத்து தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருவள்ளூர்மாவட்ட செயலராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பெயரையும் சேர்க்கவில்லை.
எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, அ.தி.மு.க., காஞ்சிபுரம் மண்டல தொழில்நுட்ப அணி தலைவராக பதவி வகிக்கும் அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக்கும் நியமிக்கப்படவில்லை.
திருவொற்றியூரில் தேர்தல் பணிகளில் கவனிக்க பொறுப்பாளர்கள் இல்லாததால், கட்சியினர் சுணக்கம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

