/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் லாரி ஓட்டுனரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டோர் கைது
/
குடிநீர் லாரி ஓட்டுனரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டோர் கைது
குடிநீர் லாரி ஓட்டுனரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டோர் கைது
குடிநீர் லாரி ஓட்டுனரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டோர் கைது
ADDED : செப் 03, 2024 12:25 AM
புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன், 58; குடிநீர் வாரிய லாரி ஓட்டுனர். கடந்த 31ம் தேதி மாலை 6:00 மணியளவில், புளியந்தோப்பு வ.உ.சி.நகர் எட்டாவது தெருவில் குடிநீர் வினியோகம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் வந்த வாலிபர்கள் மூன்று பேர், லாரியை மடக்கி முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.
மேலும், ஓட்டுனரை வண்டியில் இருந்து கீழே இறக்கி, 1,000 ரூபாயை பறித்து சென்றனர்.
இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில், வ.உ.சி., நகரைச் சேர்ந்த ராஜன் என்ற ஜோதிராஜன், 24, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்த ராகுல், 21, மற்றும் திரு.வி.க., நகரைச் சேர்ந்த விஷ்வா, 22, ஆகியோர் என்பது தெரிய வந்தது. மூவரும், மது போதையில் லாரி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மூன்று பேரையும் புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.