/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிநாட்டு வேலை என பெண்களை சீரழித்தோர் கைது
/
வெளிநாட்டு வேலை என பெண்களை சீரழித்தோர் கைது
ADDED : மே 31, 2024 01:01 AM

சென்னை, இரு தினங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 24, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆபியா, 24, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகுமார், 40 ஆகியோர், வெளிநாடுகளில் உள்ள, ஹோட்டல்களில் வேலை இருப்பதாக பெண்களை அழைத்துச் சென்று, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, ஜெயகுமார் உள்ளிட்ட மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.
பெண்களிடம் வெற்று பத்திரத்தில் கைரேகை பெற்றும், கடன் பத்திரம், ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கியும் அடிமை போல தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.