/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்தோர் கைது
/
பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்தோர் கைது
ADDED : ஜூன் 19, 2024 12:23 AM

மயிலாப்பூர், மதுரையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், மயிலாப்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 9ம் தேதி அவரது மொபைல் போனில், அவரையும் அவருடைய சகோதரியையும் ஆபாசமாக சித்தரித்து, புகைப்படம் வந்திருந்தது.
இது குறித்து மயிலாப்பூர் மகளிர் போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த நவீன்ராஜ், 27, திருப்பூரைச் சேர்ந்த ருத்ரமணிகண்டன், 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் கூறியதாவது:
நவீன்ராஜ் சில ஆண்டுகளாக, அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர், சென்னையில் இருப்பதை அறிந்து, தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்து உள்ளார்.
மேலும், அப்பெண் தங்கியிருந்த விடுதியில் காதலிப்பதாக 'போஸ்டர்' ஒட்டியபோது, காவலாளி எச்சரித்து அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணை பழிவாங்கும் நோக்கத்துடன், நண்பர் ருத்ரமணிக்கண்டனுடன் இணைந்து, சமூக வலைதளத்தில் இருந்து, அவரும் அவரது சகோதரியும் உள்ள புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பின், இருவரது புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து, அவரது மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 'இளம்பெண்கள் சமூக வலைதளங்களில், தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்' என, போலீசார் அறிவுறுத்தினர்.