/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா போதையில் மாணவன் விசாரணைக்கு பின் மூவர் கைது
/
கஞ்சா போதையில் மாணவன் விசாரணைக்கு பின் மூவர் கைது
ADDED : ஆக 08, 2024 12:33 AM
பழவந்தாங்கல், பழவந்தாங்கல் அரசுப் பள்ளியில், நேற்று முன்தினம் பிளஸ் 2 மாணவர், மயக்க நிலையிலே இருந்துள்ளார்; உளறி உளறி பேசியுள்ளார்.
இது குறித்து அறிந்த தலைமை ஆசிரியர், மாணவரை சோதனையிட்டதில், 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. விசாரணையில், பழவந்தாங்கல் ரயில் நிலையம் பகுதியில், கஞ்சா பொட்டலத்தை வாங்கியதாக, மாணவர் கூறினார்.
தொடர்ந்து, மாணவருக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியர்கள், பெற்றோரை வரவழைத்து அனுப்பினர். பின், பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பழவந்தாங்கல் கல்லுாரி சாலை அருகே, போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை பார்த்ததும், தப்பியோட முயன்ற மூவரை, போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 1.1 கிலோ அளவில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
பழவந்தாங்கலை சேர்ந்த தில்ஷன், 24, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வைஷாக், 23, லோகபிரவீன், 24, ஆகியோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பது தெரியவந்தது. மூவரையும், பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.