‘ஓசி’யில் டீ, பிஸ்கட் கேட்டு தகராறு செய்த மூவர் கைது
‘ஓசி’யில் டீ, பிஸ்கட் கேட்டு தகராறு செய்த மூவர் கைது
ADDED : மே 22, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஷெனாய் நகர், கல்லறை சாலையில் வசிக்கும் அப்பாஸ், அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இக்கடைக்கு அடிக்கடி வரும், கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த ஹரிபிரசாந்த் மற்றும் அவரது இரு சகோதரர்கள், டீ, பிஸ்கட் சாப்பிட்டு, பணம் தராமல் மிரட்டி சென்றுள்ளனர்.
கடந்த ஏப்., 30ல், அதேபோல் டீ குடித்துவிட்டு, பணம் தராததை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் அப்பாஸை சரமாரியாக தாக்கி, கல்லாவில் இருந்த 2,500 ரூபாயை பறித்து தப்பினர்.
அப்பாஸ் புகாரையடுத்து, டி.பி.,சத்திரம் போலீசார் விசாரித்து, ஹரிபிரசாத், 19, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
