/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது
/
வீடு பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது
ADDED : ஆக 15, 2024 12:18 AM
ராயப்பேட்டை,
திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுமன்ராஜ், 37; மேற்கு மாம்பலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிகிறார்.
கடந்த 7ம் தேதி இரவு, இவரது வீட்டில் இருந்த 16.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரை, ராயப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
இதில், ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த விஷால், 18, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரணி, 24, ஆகாஷ், 20, ஆகிய மூவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருடிய நகையை, மயிலாப்பூர் மற்றும் கிருஷ்ணாம்பேட்டை பகுதியிலுள்ள அடகு கடையில் வைத்து, பணம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, அடகு கடையில் இருந்த நகைகளை, போலீசார் மீட்டனர்.