ADDED : ஜூன் 07, 2026 10:33 PM
அ நிறம் | அளவு
பம்மல்: இளைஞரை வழிமறித்து, செயினை பறித்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொழிச்சலுார், சண்முகா நகரைச் சேர்ந்தவர் விஷ்வா, 18. இவர் நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., – எக்ஸ்.எல்., மொபட்டில் பொழிச்சலுார் – பம்மல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரே பைக்கில் வந்த மூன்று பேர், விஷ்வாவை வழிமறித்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 25 கிராம் வெள்ளிச் செயினை பறித்து சென்றனர்.
இது குறித்து சங்கர் நகர் விசாரிக்கின்றனர்.
