ADDED : மே 03, 2024 12:37 AM
மதுரவாயல், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து, மதுரவாயல் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட ஐயப்பன்தாங்கலை சேர்ந்த தங்கராஜ், 22, மாங்காடை சேர்ந்த ஸ்ரீநாத், 22, திருவேற்காடை சேர்ந்த தீபன், 20 ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.
மூவரும் இரவு நேரங்களில் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்வர். வீட்டிற்கு வெளியே உள்ள ஸ்கூட்டர்களின் லாக்கை உடைத்து திருடி விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்துள்ளனர்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க, திருடிய ஸ்கூட்டர்களை ஸ்ரீபெரும்புதுார் சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் மாடுகள் வைத்திருக்கும் நபர்களிடம் விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல நிறுவனங்களின் 13 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.