/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளை சீரழித்த தந்தை உட்பட மூவர் கைது
/
மகளை சீரழித்த தந்தை உட்பட மூவர் கைது
ADDED : ஆக 22, 2024 12:21 AM
கொளத்துார், கொளத்துாரை சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி, பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். பள்ளி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வர உத்தரவிட்டது. இதையடுத்து, 19ம் தேதி தாயுடன் பள்ளிக்கு செல்லும் வழியில் சிறுமி மாயமானார். இது குறித்து புகாரின்படி கொளத்துார் போலீசார் விசாரித்தனர்.
இதில், சிறுமி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து.
போலீசார் சிறுமியை மீட்டு, அவரது நண்பர்களான ரூபன் மற்றும் அரவிந்தன் ஆகியோரை, நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர். பின், மாணவியை கெல்லீஸில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் மாணவியிடம், துாய்மை பணியாளரான அவரது தந்தை, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன் சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான ரூபன் மற்றும் அரவிந்தன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் சிறுமியிடம் அத்துமீறியது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரும் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டனர்.