/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்
/
வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்
வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்
வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்
ADDED : ஜூலை 06, 2024 12:45 AM
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 33; நடன கலைஞர்.
பொது பாதையை ஆக்கிரமித்து இவர் கட்டிய ஓட்டு வீட்டை கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று முன்தினம் இடிக்கச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி, ராஜ்குமார் தீயிட்டுக்கொண்டார். கவலைக்கிடமான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எனினும் வருவாய் துறையினர், வீட்டை இடித்தனர்.
வாலிபர் தீக்குளித்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி காத்திருப்போர் பட்டியலுக்கும், வருவாய் ஆய்வாளர் கோமதி ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கும், கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா, முக்கரம்பாக்கத்திற்கும் மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து ஆவடி தனி தாசில்தார் சரவணகுமாரி, கும்மிடிப்பூண்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.