/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
75 லி., சாராயம் வைத்திருந்த தம்பதி கைது
/
75 லி., சாராயம் வைத்திருந்த தம்பதி கைது
ADDED : மார் 11, 2025 12:45 AM

சென்னை,
வடசென்னை, பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் சாராயம் விற்பதாக, அண்ணா நகர் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை, பாடி மேம்பாலத்தை கண்காணித்தபோது, பெண்கள் உட்பட மூவர் சிக்கினர். அவர்களிடம் வெளிமாநில சாராயம் இருப்பது தெரிந்தது.
விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போஸ்லே பாபு, 50, அவரது மனைவி நேபு, 50, அவர்களது மகள் ரத்னேஷா அர்சிங்த் பவார், 28; என்பது தெரிந்தது.
இவர்கள், பாடி மேம்பாலத்தில் தங்கி, தெருவோரங்களில் பாசிமணி, பலுான் விற்பவர்கள். இவர்கள், சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவுக்கு செல்லும்போது, அங்கு காய்ச்சி விற்கும் சாராயத்தை ரயிலில் கடத்தி வந்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து, 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்.