/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி கொலை வழக்கில் மூன்று பேர் சிக்கினர்
/
ரவுடி கொலை வழக்கில் மூன்று பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 25, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர், பொன்னேரி அடுத்த பெரியகாவணம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 26. இவர் நேற்று முன்தினம் இரவு, மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டுக்காலனி கிராமத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவரது மனைவிக்கும், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்த விஷ்ணு, 24, என்பவருக்கும் இடையே இருந்த கள்ளகாதல் விவகாரத்தில், கொலை நடந்தது தெரிந்தது. நேற்று, காணியம்பாக்கம் சாது, 22, தோட்டக்காடு ஹரிஷ், 19, வெள்ளம்பாக்கம் கார்த்திக், 21, ஆகியோரை கைது செய்தனர்.
விஷ்ணு உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.