ADDED : ஆக 06, 2026 09:31 PM
வியாசர்பாடி: வியாசர்பாடி, கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 70; ஓய்வு பெற்ற தனியார் ஊழியர். கடந்த மாதம் 26ம் தேதி ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, ஆடி மாத கூழ் வார்த்தல் நிகழ்ச்சிக்கு மனைவியுடன் சென்றுள்ளார். இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் திருடு போனதாக சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது.
வீட்டுக்கு வந்த சந்திரசேகர், வீட்டிலிருந்த 13 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களுடன் 2 லட்ச ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து சந்திரசேகர் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பதுங்கியிருந்த அஸ்வின், 22, முகமது ஹாரூன் ரசீத், 28 மற்றும் கோகுல், 23 ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 சவரன் நகை மற்றும் 15,000 ரூபாயை மட்டுமே போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
