/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயனாவரத்தில் வழிப்பறி மூன்று ரவுடிகள் சிக்கினர்
/
அயனாவரத்தில் வழிப்பறி மூன்று ரவுடிகள் சிக்கினர்
ADDED : மார் 06, 2025 12:14 AM
அயனாவரம், அயனாவரம், பாளையக்காரன் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 58. இவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர், சாப்பிட்டு, பார்சல் வாங்கிய உணவிற்கு பணம் கொடுக்காமல் போனார்.
அவரை பிடித்து நந்தகுமார் பணம் கேட்டபோது, கத்தியை காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்த பணத்தையும் பறித்து தப்பினார்.
புகாரின்படி, அயனாவரம் போலீசார் விசாரித்து, வில்லிவாக்கத்தை சேர்ந்த அபெல் ஜெர்மியா, 19, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், கே.எச்., சாலையில் டிபன் கடை நடத்தி வரும் சரவணன், 39, என்பவரிடம், கடந்த 28ம் தேதி, கத்தியை காட்டி பணம் பறித்த, அயனாவரத்தை சேர்ந்த இளவசரன், 31, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த ஜனவரி 29ல், கான்ஸ்டபிள் சாலையில் டீ கடை நடத்தும் ரேஜீஸ், 45, என்பவரிடம், கத்தியை காட்டி பணம் பறித்த, அண்ணா நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மூவரையும், அயனாவரம் போலீசார் விசாரித்து, சிறையில் அடைத்தனர்.