ADDED : மே 06, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:சூளை பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 30. இரண்டு ஆண்டுகளாக அங்காளம்மன் கோவில் தெருவில், 'அஸ்மிதா என்டர்பிரைசஸ்' என்ற கடையை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் புளியந்தோப்பு, தட்டான்குளம் பிரதான சாலையில் நடந்து சென்றபோது, விக்னேஷ் உள்ளிட்ட மூவர் கதிர்வேலிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த 650 ரூபாயை பறித்து சென்றனர்.
கதிர்வேல் அளித்த புகாரின்படி, புளியந்தோப்பைச் சேர்ந்த விக்னேஷ், 25, ஓட்டேரியைச் சேர்ந்த வினோத், 21, மற்றும் நெற்குன்றத்தை சேர்ந்த பீட்டர், 20, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.