ADDED : ஜூலை 04, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், நல்லதண்ணீர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார், 24; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்து, எண்ணுார் விரைவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மூவர் கத்திமுனையில் சஞ்சய் குமாரின் மொபைல் போனை பறித்து தப்பியோடினர். திருவொற்றியூர் போலீசாரின் விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த பாம்பு நாகராஜ், 21, தேவராஜ், 22, மற்றும் 17 வயது சிறுவன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நேற்று மதியம், அவர்களை கைது செய்தனர்.