மடிப்பாக்கம், மடிப்பாக்கம், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம்,28. இவர் தனக்கு சொந்தமான 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை, கடந்த பிப்.18ல் தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை.
இதுகுறித்து, அவர் மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் மனு கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாதவன்,28, வினோத், 22 மற்றும் வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்த பிரதீப் குமார், 22. ஆகியோர் இக்குற்றவழக்கில், ஈடுபட்டது தெரியவந்து மேற்பட்ட மூவரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், மூவரும் மடிப்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் 2 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. பின், அவர்களிடமிருந்து புகார்தாரரின் வாகனம் உட்பட 3 வாகனங்கள் மீட்கப்பட்டது.
மேற்கொண்டு விசாரித்ததில், மாதவன் மீது 8 வழிப்பறி வழக்குகள், வினோத் மீது 7 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று முன்தினம், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்கூட்டர்
திருடியவர்
சிக்கினார்
சென்னை, மார்ச் 8-
பழைய வண்ணாரப்பேட்டை, செல்வவிநாயகர் தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டியன், 47; மிட்டாய் வியாபாரி. கடந்த 2ம் தேதி, கோயம்பேடு, காளியம்மன் தெருவில் உள்ள கடைக்கு மிட்டாய் வியாபாரம் செய்துவிட்டு திரும்பி பார்த்தபோது, அவரது ஸ்கூட்டர் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், அரும்பாக்கம், பெருமாள் கோவில் கார்டன் தெருவைச் சேர்ந்த காசிராஜன், 50, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், ஸ்கூட்டரை மீட்டனர்.