ADDED : மார் 23, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இந்திய த்ரோ பால் சம்மேளனம் மற்றும் பீஹார், தமிழக த்ரோ பால் கழகம் இணைந்து, பீஹார் மாநிலம், அரோவில் குன்வர் சிங் ஸ்டேடியத்தில் 44வது சீனியர் த்ரோ பால் எனும் எறிபந்து போட்டியை நடத்தின. அதில், ஆடவர் பிரிவில் 22 மாநில அணிகள், மகளிர் பிரிவில் 21 மாநில அணிகள் பங்கேற்றன.
அதில் சிறப்பாக விளையாடி, தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டும், இரண்டாம் இடத்தை கைப்பற்றின.
வெற்றி பெற்ற தமிழக அணியை முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி சிங் பாராட்டி, பரிசுகளை வழங்கினார். பரிசு பெற்று திரும்பிய வீரர், வீராங்கனையரை தமிழக எறிபந்து கழக செயலர் மணி, சென்னை மாவட்ட எறிபந்து கழக செயலர் ரூபானந்தம் ஆகியோர் வாழ்த்தினர்.

