/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு
/
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு
ADDED : ஜூன் 16, 2024 12:13 AM

சென்னை, சென்னையின் முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர் உள்ளது.
இதில், திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சந்திப்பாக டைடல் பார்க் உள்ளது.
அருகில் மேம்பால ரயில் நிலையம் உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
நெரிசலை குறைக்க, திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில், 'யு' வடிவ மேம்பாலம் கட்ட, சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது.
இந்த பணி, 18 கோடி ரூபாயில், 2021ம் ஆண்டு துவங்கியது. இதில், 18 துாண்கள் அமைக்கப்படுகின்றன. மையத் துாண், 18 அடி உயரம். மேம்பால சாலை 400 மீட்டர் நீளம், 25 அடி அகலம் உடையது.
தற்போது, பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் வாகன போக்குவரத்துக்கு விடும் வகையில் மேம்பாலம் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.