/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருவமழை முன்னெச்சரிக்கை திருவொற்றியூர் கவுன்சிலர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
பருவமழை முன்னெச்சரிக்கை திருவொற்றியூர் கவுன்சிலர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பருவமழை முன்னெச்சரிக்கை திருவொற்றியூர் கவுன்சிலர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பருவமழை முன்னெச்சரிக்கை திருவொற்றியூர் கவுன்சிலர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 12:21 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்த கூட்டத்தில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி சங்கர், மண்டல பொறுப்பு அலுவலர் ஜகுபர் உசேன், பொறுப்பு செயற்பொறியாளர் பாபு, கவுன்சிலர்கள், காவல் துறை, குடிநீர் வாரியம், மின் வாரியம், சி.பி.சி.எல்., நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மழையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மன்றத்தில் எடுத்துரைத்தனர்.
இதற்கு பதிலளித்து, மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் ஜகுபர் உசேன் பேசுகையில், ''பருவமழை பாதிப்பின் போது, மீட்பு பணிகளில் அதிகாரிகள் - கவுன்சிலர்கள், தேரின் இருசக்கரம் போல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி சங்கர் பேசியதாவது:
மழைநீர் வடிகால் பணிகள் விடுபட்டிருந்தால் சீர்செய்ய வேண்டும். குறைந்த குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை நம்பி, இந்த பருவமழையை எதிர்கொள்ள முடியாது. அதிக குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கவுன்சிலர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சி.பி.சி.எல்., நிறுவன ஆயில் கழிவுகள் மழைநீரில் வெளியேறிதால், பெரிய பிரச்னை ஏற்பட்டது. நிறுவனம், ஆயில் கழிவுகளை கையாள்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.