/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளம் வறண்டது
/
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளம் வறண்டது
ADDED : மே 07, 2024 12:23 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. தினசரி, நுாற்றுக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ய வருவர்.
இக்கோவில் உள்ளே, பிரம்ம தீர்த்த குளமும், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளது.
கோவில் குளத்திற்கு நீர் வரத்து பாதைகள் மற்றும் நீர் தேங்க தேவையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால், குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் இருந்தது.
பின், கோவில் நிர்வாகம் - மாநகராட்சி இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவதாக, 'மிக்ஜாம்' புயலின் போது, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளத்தில், 12 படிக்கட்டுகள் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.
தெப்போற்சவமும், வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில், பிப்ரவரி மாத துவக்கம் முதலே, கோடை வெயில் வெளுத்து வாங்கி வருவதால், குளத்தில் தேங்கிய தண்ணீர் வேகமாக வற்ற துவங்கியது.
தற்போது குளம் முற்றிலுமாக வறண்டுள்ளது. கோவில் நிர்வாகம் சுதாரித்து, குளத்தில் தண்ணீர் நிரந்தரமாக தேங்கிட வழிவகை செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.