தண்ணீர் பந்தல் அமைப்பதில் த.வெ.க., -– தி.மு.க., மோதல்
தண்ணீர் பந்தல் அமைப்பதில் த.வெ.க., -– தி.மு.க., மோதல்
ADDED : ஜூன் 07, 2026 04:13 PM
அ நிறம் | அளவு
வளசரவாக்கம்: தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக, த.வெ.க., – தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரவாயல் மேட்டுக்குப்பம் கங்கா நகரில், த.வெ.க., நிர்வாகி குணசேகரன் ‘தண்ணீர் பந்தல்’ அமைந்துள்ளார். மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ., முன்னிலையில் திறந்து வைப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்ட இடம் 147வது வார்டு தி.மு.க. வட்ட செயலர் மாதவன் வீட்டின் அருகே இருப்பதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறி கைகலப்பில் முடிந்தது.
இதுதொடர்பாக இரு தரப்பும் அளித்த புகாரை அடுத்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
