UPDATED : மே 07, 2026 11:08 PM
ADDED : மே 07, 2026 03:42 PM
ஆன்மிகம்
* பார்த்தசாரதி கோவில்
சித்திரை மாத பிரம்மோத்சவத்தில் பல்லக்கு வெண்ணெய் தாழி திருக்கோலம் - -காலை 6:15 மணி. குதிரை வாகன புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
சிங்காரவேலர் வசந்த உத்சவம் ஏழாம் நாள் சுவாமி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* கைவினை, ஆடைகள் கண்காட்சி
காலா உத்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடைகள், நகை, உணவு கண்காட்சி - முற்பகல் 11:00 மணி. இடம்: அருள்முருகன் டவர்ஸ், 200 அடி சாலை, பழைய பல்லாவரம்.
***
* தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம்
திருப்புகழ் இலவச வகுப்பு நடத்துபவர்- குகஸ்ரீ -- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
* தேவி கருமாரி அம்மன் கோவில்
ராகு கால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம்
மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* அஷ்டலட்சுமி கோவில்
அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
- பொது -
* தியாக பிரம்ம கான சபா
நாடக விழா. கோமல் தியேட்டர்சின் 'சிவசங்கரி' நாடகம் -- மாலை 6:45 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.
* இலவச தற்காப்பு கலை வகுப்பு
தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் கோடை சிறப்பு வகுப்பு - மாலை 5:00- - 7:00 மணி வரை. இடம்: அஐய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, மேடவாக்கம் 94122 9595
நாடக திருவிழா
பாத்திமா பாபு பேப்ஸ் தியேட்டரின் கோடை நாடக திருவிழாவில் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். தொடர்புக்கு 044 - 2814 0806
