/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட ஆப்பிள்
/
டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட ஆப்பிள்
ADDED : ஜூன் 15, 2024 12:19 AM

அம்பத்துார், அயப்பாக்கம் ஏரிக்கரை அருகே, திருவேற்காடு பிரதான சாலையோரம், நேற்று காலை 2,000 கிலோவிற்கும் மேல், கெட்டுப்போன ஆப்பிள் கொட்டப்பட்டிருந்தன.
ஆப்பிளை பொறுத்தவரை, தற்போது 1 கிலோ தரத்திற்கு ஏற்ப 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த நிலையில், டன் கணக்கில் ஆப்பிள், சாலையில் கொட்டப்பட்டிருந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவேற்காடு அருகே சேமிப்பு கிடங்குகளில், கோயம்பேடு சந்தையில் வியாபாரத்திற்காக ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு பழங்கள் இருப்பு வைக்கப்படுகின்றன.
அவ்வாறு, வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழங்கள், கடும் வெயில், அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் பல மணி நேரம் நீடிக்கும் அறிவிக்கப்படாத மின் தடையால் கெட்டுப்போனது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில், லாரியில் கொண்டு வந்து கொட்டிச்சென்றது தெரியவந்தது.

