/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரம்பரிய கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி
/
பாரம்பரிய கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி
பாரம்பரிய கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி
பாரம்பரிய கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி
ADDED : ஜூன் 09, 2024 01:24 AM

சென்னை:தமிழக அரசின் பூம்புகார் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஆழ்வார்பேட்டை சி.பி.ஆர்ட் மையத்தில் துவக்கப்பட்டு உள்ளது.
கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தமிழகம், வடமாநிலங்களில், பூம்புகார் விற்பனை நிலையங்களையும், கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை எனும் பெயரில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட் மையத்தில், கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
இதில் பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை கலை தட்டுகள், ஓவியங்கள், களிமண், கல் மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள், மர மேஜை, நாற்காலி, சணல் பொருட்கள், ருத்ராட்சம், பரிசுப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளன.
மேலும் அகர்பத்தி, பருத்திப்புடவை, வாரணாசி ஜரிகை துணி வகைகள், ராஜஸ்தான் கைத்தறி படுக்கை விரிப்பு, சுடிதார் வகைகள், சுட்ட மண் சிற்பங்கள், பல்வேறு மாநில சிறப்பு செயற்கைக்கல் நகை, முத்து வகைகள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.
வரும் செப்., மாதம் வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என, பூம்புகார் மேலாளர் கோபி தெரிவித்துள்ளார்.