ADDED : மார் 08, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், :சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில், எம்.ஜி.எம்., முதல் முட்டுக்காடு படகு இல்லம் வரை, இன்று மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
அதனால், காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து மாமல்லை செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பில் இருந்து, கே.கே.,சாலை வழியாக சோழிங்கநல்லுார் சந்திப்பு - ஓ.எம்.ஆர்., - படூர் மார்க்கமாக கோவளம் நோக்கி திருப்பி விடப்படும்.
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், கோவளத்தில் இருந்து இடது புறமாக, படூர் - ஓம்.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பு - கே.கே., சாலை மார்க்கமாக திருப்பப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.