தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக அடையாறில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக அடையாறில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக அடையாறில் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜூன் 26, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அடையாறு, எல்.பி., சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து, எம்.ஜி.சாலை சந்திப்பு வரையிலான பகுதி முழுதும், மெட்ரோ ரயில் பணி காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றத்தை, போலீசார் இன்று முதல் அமல்படுத்தி உள்ளனர்.

காவல் துறை அறிக்கை:

* திருவான்மியூரில் இருந்து, திரு.வி.க., பாலம் நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எல்.பி., சாலை – எம்.ஜி., சாலை சந்திப்பிலிருந்து, சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை, சாஸ்திரி நகர், 1வது அவென்யூ வழியாக செல்லலாம்

* பெசன்ட் நகரில் இருந்து, 7வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள், மகாத்மா காந்தி சாலை அடைந்து வலது புறம் திரும்பி சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை இடது புறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக செல்லலாம்

* எல்.பி., சாலையிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள், சாஸ்திரிநகர் 1வது அவென்யூ சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி, 11வது குறுக்கு சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி, 8வது குறுக்கு சாலை அடைந்து பின், 10வது குறுக்கு சாலை வழியாக செல்லலாம்.

* சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலையிலிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக, எல்.பி.,சாலை வரையிலும், சாஸ்திரி நகர், 1வது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரி நகர் 1வது பிரதனா சாலை வரையிலும் ஒரு வழிப்பாதையாக இருந்த நிலையில், இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது

* சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை, திரு.வி.க., பாலம் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மற்றும் 11வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்படுகிறது

* திருவான்மியூரிலிருந்து, திரு.வி.க., பாலம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள், எல்.பி., – எம்.ஜி., சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்ப வேண்டும். பின் இந்திரா நகர், 2வது அவென்யூ சாலை அடைந்து வலதுபுறம் திரும்பி, 1வது பிரதான சாலை வழியாக வலது மற்றும் இடது புறம் திரும்பி, 1வது அவென்யூ சாலை அடைந்து, அங்கிருந்து வலது புறம் திரும்பி எல்.பி.,சாலை பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பு அடைந்து, இடது புறம் திரும்பி செல்லலாம்.

* இந்திரா நகர், 2வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us