/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச மகளிர் தின மாரத்தான் இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம்
/
சர்வதேச மகளிர் தின மாரத்தான் இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம்
சர்வதேச மகளிர் தின மாரத்தான் இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம்
சர்வதேச மகளிர் தின மாரத்தான் இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : மார் 08, 2025 12:45 AM
தாம்பரம், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில், எம்.ஜி.எம்., முதல் முட்டுக்காடு படகு இல்லம் வரை, இன்று மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த நிகழ்வில், 5,000 பெண்கள் பங்கேற்பர்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வின்போது இடையூறுகளை தவிர்ப்பதற்கும், கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில், இன்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது வாகன இயக்கத்தை ஒழுங்குப்படுத்தவும், பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் உதவும்.
ஆகவே, சென்னை மாநகரில் இருந்து மாமல்லை நோக்கி செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பில் இருந்து, கே.கே.,சாலை வழியாக சோழிங்கநல்லுார் சந்திப்பு - ஓ.எம்.ஆர்., - படூர் மார்க்கமாக கோவளம் நோக்கி திருப்பி விடப்படும்.
★ மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், கோவளத்தில் இருந்து இடது புறமாக, படூர் - ஓம்.எம்.ஆர்., வழியாக சோழிங்கநல்லுார் சந்திப்பு - கே.கே., சாலை மார்க்கமாக திருப்பிவிடப்படும்.
சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள், தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.