ADDED : ஆக 09, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்,ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார், காரப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில், நேற்று இரவு, ஒரு மணி நேரம் எதிர்பாராத மழை பெய்தது.
மெட்ரோ பணியால், வடிந்து செல்ல பாதை இல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
இதனால், மேட்டுக்குப்பம் முதல் சோழிங்கநல்லுார் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணி முடித்து வீடு திரும்பியவர்களுக்கு, 3 கி.மீ., துாரம் செல்ல, இரண்டு மணி நேரம் வரை ஆனது.