/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆர்., செல்லும் வாகன ஓட்டிகளை கதற விடும் போக்குவரத்து போலீசார்
/
இ.சி.ஆர்., செல்லும் வாகன ஓட்டிகளை கதற விடும் போக்குவரத்து போலீசார்
இ.சி.ஆர்., செல்லும் வாகன ஓட்டிகளை கதற விடும் போக்குவரத்து போலீசார்
இ.சி.ஆர்., செல்லும் வாகன ஓட்டிகளை கதற விடும் போக்குவரத்து போலீசார்
ADDED : செப் 08, 2024 12:29 AM
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையான இ.சி.ஆரும், பழைய மாமல்லபுரம் சாலையான ஓ.எம்.ஆரும் சென்னையின் பிரதான சாலைகளாகும். இ.சி.ஆரில் பொழுதுபோக்கு மையங்கள், ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிமாக உள்ளன.
இ.சி.ஆர்., அக்கரையில் இருந்து அடையாறு 11 கி.மீ., துாரம் கொண்டது. மாலை நேரத்தில், மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் பேருந்துகள் தவிர இதர வாகனங்களை, அக்கரை சந்திப்பில் இருந்து நேராக செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதிப்பதில்லை.
மாறாக, இடது பக்கம் கே.கே., சாலையில் திருப்பி விடுகின்றனர். இதில், வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், கே.கே., சாலையில், அரை கி.மீ., துாரத்தில், 'யு - டர்ன்' செய்து, மீண்டும் இ.சி.ஆர்., வந்து அங்கிருந்து அடையாறு நோக்கி செல்கின்றனர்.
கே.கே. சாலை, யு - டர்னில், போலீசார் வழிகாட்டி பலகை வைக்காததால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள், சோழிங்கநல்லுார் சிக்னல் செல்கின்றனர். அங்கு நேராக செல்ல முடியாது. இடது பக்கம் திரும்பி, அரை கி.மீ., துாரத்தில், யு - டர்ன் மற்றும் துரைப்பாக்கத்தில் 1 கி.மீ., துாரம் யு - டர்ன் செய்து, ஓ.எம்.ஆர்., வழியாக, டைடல் பார்க் சென்று, அங்கிருந்து, அடையாறு நோக்கி செல்ல வேண்டும்.
இதற்கு, 18 கி.மீ., துாரம் ஆகிறது. மேலும், ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணியால், வாகன நெரிசலில், 2 மணி நேரம் வரை ஆகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றனர். அக்கரை சந்திப்பு, சென்னை போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டிலும், சோழிங்கநல்லுார் சந்திப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டிலும் உள்ளன.
எனவே, வாகன ஓட்டிகளை அலைய விடுவதை தடுக்க, இரண்டு கமிஷனரக, உயர் அதிகாரிகளும் கள ஆய்வு செய்து, இ.சி.ஆர்., அக்கரை சந்திப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
அக்கரையில் உரிய வழிகாட்டுதல் இல்லாமல் திருப்பி விடுவதால், சோழிங்கநல்லுார், துரைப்பாக்கத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. விபத்தும் அதிகரிக்கிறது. நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள், எங்களிடம் கோபத்தைக் காட்டுகின்றனர். அக்கரை போலீசாரால் நாங்கள் இழிசொல்லுக்கு ஆளாகிறோம். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். நடவடிக்கை தான் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆறு வழியில் அனுமதில்லை
இ.சி.ஆரில், அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய துாரத்தை, ஓ.எம்.ஆர்., வழியாக இரண்டு மணி நேரம் சுற்ற விடுகின்றனர். நேர விரயம், எரிவாயு வீணடிப்பு, அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமை உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்கிறோம். இ.சி.ஆரில் ஆறுவழிச் சாலை அமைத்த பிறகும் ஏன் அனுமதிப்பதில்லை என தெரியவில்லை. போலீசாரிடம் கேட்டால் உரிய பதிலும் கூறுவதில்லை.
- கணேசமூர்த்தி, 55, இருசக்கர வாகன ஓட்டி.
நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
அக்கரையில் உரிய வழிகாட்டுதல் இல்லாமல் திருப்பி விடுவதால், சோழிங்கநல்லுார், துரைப்பாக்கத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. விபத்தும் அதிகரிக்கிறது. நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள், எங்களிடம் கோபத்தை காட்டுகின்றனர். அக்கரை போலீசாரால் நாங்கள் இழிசொல்லுக்கு ஆளாகிறோம். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். நடவடிக்கை தான் இல்லை.
- போக்குவரத்து போலீசார், ஓ.எம்.ஆர்., பகுதி.