/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பாதை பணி முடியும் வரை குமரன் நகரில் போக்குவரத்து மாற்றம்
/
மெட்ரோ பாதை பணி முடியும் வரை குமரன் நகரில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பாதை பணி முடியும் வரை குமரன் நகரில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பாதை பணி முடியும் வரை குமரன் நகரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 24, 2024 12:10 AM

சென்னை, ஓ.எம்.ஆரில், மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாக, குமரன் நகர் சிக்னல் சந்திப்பில், நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சோழிங்கநல்லுாரில் இருந்து செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், குமரன் நகர் சிக்னலில் இருந்து, 350 மீட்டர் துாரம் நேராக சென்று, சத்தியபாமா பல்கலைக்கழகம் சிக்னலில், 'யு --- டர்ன்' செய்து, செம்மஞ்சேரி நோக்கி செல்ல வேண்டும்.
அதேபோல், செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் இருந்து, சிறுசேரி, கேளம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், குமரன் நகர் சிக்னலில் இடது புறம் 300 மீட்டர் சென்று, 'யு - டர்ன்' எடுக்க வேண்டும்.
இதற்கு ஏற்ப, தடுப்பு அமைத்து, செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார், மாற்றம் செய்துள்ளனர். இந்த போக்குவரத்து மாற்றம், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.