/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் போக்குவரத்து போலீசார் அதிரடி
/
ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் போக்குவரத்து போலீசார் அதிரடி
ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் போக்குவரத்து போலீசார் அதிரடி
ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் போக்குவரத்து போலீசார் அதிரடி
ADDED : மே 22, 2024 12:35 AM

நெசப்பாக்கம், நெசப்பாக்கத்தில், சாலையோரத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு நெசப்பாக்கத்தில், ஏரிக்கரை தெரு உள்ளது.
இது, பேருந்து வழித்தட சாலையாக உள்ளது.
சென்னை, கே.கே.நகர் மற்றும் அசோக்நகரில் இருந்து வரும் வாகனங்கள் ராமாபுரம் வழியாக நந்தம்பாக்கம், மணப்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் செல்லும் பிரதான சாலையாக, ஏரிக்கை தெரு சாலை உள்ளது.
இதனால், 1.5 கி.மீ., துாரம் கொண்ட இச்சாலையில் காலை மற்றும் மாலை, 'பீக் ஹவர்'களில், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.
நெரிசலைக் குறைக்க முதற்கட்டமாக, கடந்த 2017ம் ஆண்டு நெசப்பாக்கத்தில், அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், 2.41 கோடி ரூபாய் செலவில், 300 மீ., நீளம், 60 அடி அகலத்தில், இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
இந்த இணைப்பு சாலையில் இருந்து செல்லும் ஏரிக்கரை தெரு சாலை, காணு நகர் பிரதான சாலை ஆகிய சாலைகளை, 60 அடி சாலைகளாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இதனால், பேருந்து வழித்தட சாலையான ஏரிக்கரை தெரு சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில், கடும் நெரிசல் நிலவி வருகிறது.
அத்துடன், ஏரிக்கரை தெருவில் ஒருபுறம் சாலையின் அகலத்தை குறைக்கும் விதமாக, அங்குள்ள கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகளின் வாகனங்கள் மற்றும் லோடு ஆட்டோக்கள் ஆகியவை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களால், அப்பகுதியில் சாலை குறுகலாகி, மேலும் நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, கே.கே.நகர் போக்குவரத்து ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போக்குவரத்து போலீசார், நெசப்பாக்கம் இணைப்பு சாலை நடைபாதை மற்றும் ஏரிக்கரை தெரு சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, நேற்று அப்புறப்படுத்தினர்.

