/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை பாதிப்பு
/
தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஆக 14, 2024 12:19 AM
வில்லிவாக்கம் அருகே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திருவள்ளூர் - சென்ட்ரல் இடையே, மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான ஆவடி - திருவள்ளூர் தடத்தில் நேற்று, மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருந்தன.
திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி வந்த மின்சார ரயில், வில்லிவாக்கம் - கொரட்டூர் இடையே கடந்து, அங்குள்ள பாயின்ட் பகுதியில் பாதை மாறி செல்லும் போது, நேற்று காலை 10:15 மணியளவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
உடனே, ரயில் ஓட்டுனர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆவடி, திருவள்ளூரில் இருந்து வந்த ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் வில்லிவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பயணியர் 30 நிமிடங்கள் வரை காத்திருந்து, அவதிப்பட்டனர்.தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதும், காலை 10:45 மணிக்குப் பிறகே, இந்த தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

