/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் வழியே இன்று முதல் ரயில்கள் ஓடும்
/
தாம்பரம் வழியே இன்று முதல் ரயில்கள் ஓடும்
ADDED : ஆக 18, 2024 12:18 AM
சென்னை,தாம்பரம் ரயில் நிலையம், யார்டில் பணிகள் நிறைவடைந்துள்ளதால், மின்சார, விரைவு ரயில்கள் இன்று மாலை முதல் வழக்கம் போல் ஓடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரம் ரயில் முனையம், இங்குள்ள யார்டு மேம்படுத்தும் பணிகள் 50 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டன. விரைவு ரயில்கள் மாறி செல்ல வசதியாக 'கிராஸ் டிராக்' அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தாம்பரம் ரயில் முனையத்தில் நடைமேடை 7, 8ல் விரிவாக்கம் பணி மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக ஒரு புதிய நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளால், மின்சார மற்றும் விரைவு ரயில்களின் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டன. கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் 63 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திட்டப்படி அனைத்து பணிகளும் இன்று மதியத்துடன் முடியும். இன்று மாலை முதல் வழக்கமான ரயில்சேவை துவங்கப்படும். இன்று மாலை அனைத்து மின்சார, விரைவு ரயில்களும் காலஅட்டவணைப்படி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.