/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவில் நீதிபதிகள் 104 பேர் இடமாற்றம்
/
சிவில் நீதிபதிகள் 104 பேர் இடமாற்றம்
ADDED : மே 07, 2024 12:15 AM
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற தமிழ் சட்ட இதழ் உதவி ஆசிரியர் டி.நிஷா, சிதம்பரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முன்சீப் ஜெ.ஸ்டார்லி, ஸ்ரீபெரும்புதுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், ஸ்ரீபெரும்புதுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கே.ராம்குமார், அரக்கோணம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சைதாப்பேட்டை செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வானதி, குறிஞ்சிபாடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், காஞ்சிபுரம் கூடுதல் முன்சீப் சரண்யா செல்வம், பொன்னேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஆலந்துார் கூடுதல் மாவட்ட முன்சீப் நதியா, ஆலந்துார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், எழும்பூர் மகளிர் நீதிமன்ற கூடுதல் மாஜிஸ்திரேட் வைஷ்ணவி, சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, மாநிலம் முழுதும் சிவில் நீதிபதிகள் 104 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.